யாதும் ஊரே யாவரும் கேளிர் என்ற உன்னத நோக்கத்தோடும், திரை கடல் ஓடியும் திரவியம் தேடும் வேட்கையோடும் ஆஸ்திரேலியாவிலுள்ள தெற்கு ஆஸ்திரேலியா மாகாணத்திற்கு (South Australia), பல ஆண்டுகளுக்கு முன்பே தமிழர்கள் குடிபெயர்ந்து பரவலாக வாழ்ந்துகொண்டிருந்தார்கள்.எண்ணிக்கைக் குறைவால் அவர்களிடையே அதிக தொடர்பு ஏற்பட வாய்ப்பில்லாமல் போய்விட்டது. கடந்த 2000ம் ஆண்டிற்குப் பிறகு படிப்படியாக பல நாடுகளிலிருந்து தமிழர்கள் இம்மாநிலத்திற்கு குடிபெயர்ந்தார்கள்.

அவர்களுள், தாங்கள் விரும்பிய வேலைகளில் சேர்ந்து அதிகமானோர் இம்மாநிலத்திலேயே தொடர்ந்து வாழ்ந்து வருகின்றார்கள். குடிபெயர்ந்தவர்களின் எண்ணிக்கை கடந்த 2004ம் ஆண்டிற்குப் பிறகு தொடர்ந்து அதிகமானதால் தமிழர்களாக ஒருவரையொருவர் பார்க்கவும், பழகவும் வாய்ப்பு கிடைத்தது. அதன் தொடர்ச்சியாக கடந்த 2005ம் ஆண்டு அக்டோபர் மாதத்தில் சுமார் 50 தமிழர்கள் குடும்பமாகச் சேர்ந்து எட்வர்ஸ்டவ்ன் (Edwardstown ) பகுதியிலுள்ள ஒரு அரங்கத்தில் கூடி அடிலெய்டில் முதல் தீபாவளியைக் கொண்டாடியுள்ளார்கள்.

அதனைத் தொடர்ந்து 2005 டிசம்பர் மாதம் பேர்ன்ஸைட் சமுதாயக் கூடத்தில் (Burnside Comminity Hall ) சுமார் 100 பேருக்கு மேல் குடும்பமாகக் கூடி கிறிஸ்மஸ் விழாவைக் கொண்டாடியுள்ளார்கள். இங்குதான் தமிழ்ச்சங்கத்தை உருவாக்கும் முதல் விதை போடப்பட்டுள்ளது. அதன்பிறகு 2006ம் ஆண்டு சங்கம் முறையாகப் பதிவு செய்யப்பட்டு அவ்வருட தீபாவளியை கில்கனி பகுதியிலுள்ள சால்வேஷன் ஆர்மி அரங்கத்தில் (Kilkenny Salvation Army ) சிறப்பாகக் கொண்டாடியுள்ளார்கள். அந்த வருடத்தில் இந்தியா, இலங்கை, மலேசியா தமிழர்கள் ஒன்றிணைந்து Elders park ல் சித்திரை புத்தாண்டு விழாவும் கொண்டாடப் பட்டுள்ளது.

2007ம் ஆண்டு சங்கச் செயல்பாட்டில் தொய்வுநிலை ஏற்பட்டு IAASA மற்றும் சில சங்கங்களோடு சேர்ந்து அவ்வருட தீபாவளி கொண்டாடப்பட்டுள்ளது. முக்கியமாக இந்த வருடம் தமிழர்கள் சிறு குழுவாகச் சேர்ந்து City – South Terrace ல் உள்ள பூங்காவில் தமிழர் திருநாளாம் பொங்கல் விழாவை முதன்முதலில் இங்கு கொண்டாடி உள்ளார்கள். அடுத்த 2008ம் ஆண்டு City Bingo Hall ல் பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. 2008ம் ஆண்டு பொறுப்பிற்கு வந்த செயற்குழு சில சட்டத்திட்ட நடைமுறைகளை உருவாக்கி அதன்படி செயல்படத் தொடங்கினார்கள். இவ்வருடத் தீபாவளி உட்வில் அரங்கத்தில் (Woodville Hall ) கொண்டாடப்பட்டது.

கொண்டாட்டங்களின் தொடர்ச்சியாக 2009ம் ஆண்டு தீபாவளி City Dom Polski அரங்கத்தில் கொண்டாடப்பட்டது. ஆனால் இவ்வருட பொங்கல் விழா நடைபெறவில்லை. மேலும் இந்தவருடம் சங்கமம் என்ற புதிய நிகழ்ச்சி அறிமுகப்படுத்தப்பட்டு அது உட்வில் அரங்கத்தில் (Woodville Hall ) சிறப்பாகக் கொண்டாடப்பட்டது. 2010ம் ஆண்டு அடிலைட் தமிழ்ச்சங்கமும், இலங்கைத் தமிழ்ச்சங்கமும் இணைந்து Flinders University யிலுள்ள பூங்காவில் தமிழர் திருநாள் மீண்டும் கொண்டாடப்பட்டது. இந்தவருட நிர்வாகக்குழுவில் இனி ஒவ்வொரு வருடமும் தீபாவளி, பொங்கல், சங்கமம் என மூன்று விழாக்களைக் கொண்டாடுவதென முடிவு செய்யப்பட்டது. அதன்படி 2011ம் ஆண்டு பொங்கல் விழாவை முறைப்படி இரண்டு தமிழ்ச்சங்கங்களும் இணைந்து Glen Osmond ல் உள்ள பூங்காவில் கொண்டாடினார்கள். இவ்வருட இறுதியில் பொதுக்குழு முடிவின் படி 2012ல் தமிழ்ப்பள்ளி தொடங்க துணைக்குழு அமைக்கப்பட்டு பணிகள் துரிதமாக நடந்து தெற்கு ஆஸ்திரேலியா தமிழ்ப்பள்ளியானது 02.12.2012 அன்று சுமார் 23 மாணவர்கள் ஒரு ஆசிரியரோடு சீரும் சிறப்புமாக தொடங்கப்பட்டது.

2012ம் ஆண்டு தீபாவளியானது City Dompolski அரங்கத்திலும் பொங்கல் Reknown Park லும் கொண்டாடப்பட்டது. அதனைத் தொடர்ந்து 2013ம் ஆண்டு பொங்கல் பென்னிங்டன் தமிழ்ப்பள்ளியிலும், தீபாவளி Family Christian Center Seaton ம் கொண்டாடப்பட்டது.

தமிழர் திருநாளாம் பொங்கல் விழா 2014ம் ஆண்டு அடிலைட் தமிழ்ச்சங்கமும், இலங்கைத் தமிழ்ச்சங்கமும் இணைந்து போனிதன் பூங்காவில் (Bonython Park ) வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டது. 2015ம் ஆண்டு 2017ம் ஆண்டு மற்றும் 2018ம் ஆண்டு தீபாவளித் திருநாட்கள் உட்வில் அரங்கத்தில் கொண்டாடப்பட்டது. 2014ம் ஆண்டு 2016ஆண்டு மற்றும் 2019ம் ஆண்டு தீபாவளித் திருநாட்கள் Family Christian Center, Seaton ல் கொண்டாடப்பட்டது. வரலாறு தொடரும் ………