அடிலைட் தமிழ்ச்சங்க மகளிர் அமைப்பு.
சம வாய்ப்பும், உரிமையுமே சரியான வளர்ச்சிக்கு அடிப்படை என்பதை செயல்படுத்தும் முயற்சியாக கடந்த 2013ஆம் ஆண்டு அக்டோபர் 30ஆம் தேதி அடிலைட் தமிழ் சங்கத்தால் தமிழ் தாய்மார்கள், இளம் பெண்களைக் கொண்டு மகளிர் பிரிவு சிறப்பாக தொடங்கப்பட்டது. இதன் மூலம் சங்கத்தை வலுப்படுத்தி தனித்துவ மிக்க செயல்கள் மூலம் சங்கத்திலும், சமூகத்திலும் மறுமலர்ச்சியை ஏற்படுத்தி தலைமைப் பண்புடன் பொதுச் சமூக பணிகளை செய்யவும் இக்குழு பல முயற்சிகளை எடுத்தது. தொடர்ச்சியாக மகளிர் தினம், நிலாச்சோறு போன்ற நிகழ்ச்சிகளை மகளிர் அமைப்பு முன்னெடுத்தது.
இடையில் சில ஆண்டுகள் செயல்பாடுகள் எதுவும் பெரிய அளவில் முன்னெடுக்கப்படாமல் இருந்த நிலையில் 2020-2021 நிர்வாக குழுவின் முயற்சியில் மகளிர் அமைப்புக்கு மீண்டும் இக்குழு புத்துணர்வு கொடுத்து கடந்த 01. 11. 2020ஆம் ஆண்டன்று 9 மகளிர் பொறுப்பாளர்களை கொண்டு மீண்டும் சிறப்பாக தொடங்கப்பட்டது.
இங்குள்ள பன்முகக் கலாச்சாரத்தை ஏற்று நமது கலாச்சாரத்தோடு மேலும் வளரவும், பெண்களின் உரிமைகள் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தி தலைமைப் பண்பையும் தனித் திறமைகளை வளர்க்கவும் இக்குழு பணியாற்றுகிறது. மேலும் குடும்பம், கல்வி, உணவு, ஆரோக்கியம் போன்ற பகுதிகளிலும் சங்க உறுப்பினர்களுக்கு குறிப்பாக பெண்களுக்கு பல நிகழ்ச்சிகளை நடத்தி, சங்க நிர்வாகக் குழுவின் வழிகாட்டுதலோடு சிறப்பான சேவைகளை தொடர்ந்து ஆற்றி வருகின்றது.