அடிலைட் தமிழ்ச்சங்க மாணவர் அமைப்பு
இன்றைய மாணவர்களே நாளைய தலைவர்கள், சங்க பொறுப்பாளர்கள் ஆவார்கள். இங்குள்ள மாணவர்களோடு மற்ற நாடுகளிலிருந்தும், தமிழ் மாணவர்கள் அடிலெய்டில் உள்ள பல பல்கலைக்கழகங்களில் படித்துக் கொண்டிருக்கிறார்கள். இவர்களுக்கு, குறிப்பாக பன்னாட்டு தமிழ் மாணவர்களுக்கு அடிலைட் தமிழ்ச்சங்கம் ஆதரவாகவும் நல்ல வழிகாட்டியாகவும் அவசர காலங்களில் முடிந்த உதவிகளை செய்யவும், கடந்த 2014ஆம் ஆண்டு மார்ச் மாதம் எட்டாம் தேதி மாசன் லேக் (Mawson Lake) நகரில் மாணவர் அமைப்பு தொடங்கப்பட்டது. 2020ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 11ஆம் தேதி மாணவர் அமைப்பானது புணரமைக்கப்பட்டு மீண்டும் தொடங்கப்பட்டது. இதில் மாணவர் ஒருங்கிணைப்பாளர்கள், நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்கள், நிதி கண்காணிப்பாளர்கள் என 9 மாணவ பொறுப்பாளர்களை கொண்ட அமைப்பாக மாற்றப்பட்டு சங்கம் நடத்துகின்ற விழாக்களில் மாணவர்கள் தன்னார்வமாக பணி செய்தும், மாணவர்களுக்குத் தேவையான பலவகை பயிற்சி வகுப்புகளை சங்கம் முன்னின்று நடத்தியும் இந்த அமைப்பானது, சங்க நிர்வாகக் குழுவின் வழிகாட்டுதலோடு இன்று சிறப்பாக செயல்பட்டுக் கொண்டிருக்கின்றது.